கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. காலையில் பாஜக- காங்கிரஸ் சரிக்கு சரி தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்த நிலையில், தற்போது நிலைமை தலைகீழாக மாறி உள்ளது.

காங்கிரஸ் கட்சி 130 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருக்கும் நிலையில், பாஜக 66 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. இதே நிலை நீடித்தால் இது பாஜகவுக்கு பலத்த தோல்வியாக இருக்கும் என கூறப்படுகிறது.