கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக, மக்கள் உயிரிழந்த ஒரு அவலமான சூழ்நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக்கழகத் தலைவருமான விஜய் அளித்த வீடியோ பதில் எந்தவித வருத்த உணர்வும் இல்லாமல், சினிமா பாணியில் இருந்தது என பொதுமக்களும், எதிர்க்கட்சித் தலைவர்களும், அரசியல் விமர்சகர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கிடையே, தமிழகத்தைச் சேர்ந்தவரல்லாத, கேரளாவைச் சேர்ந்த ஒரு நபர், அந்த காணொளியைப் பார்த்து வயிறு குலுங்க சிரித்துவிட்டு, அதனுடன் தனது கடுமையான விமர்சனத்தையும் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, “நீங்கள் முதல்வரிடம் சினிமா வசன மாதிரியான சவால் விடுகிறீர்கள், அதற்கெல்லாம் கைத்தட்டும் உங்கள் தொண்டர்களுக்கு, ஆதரவாளர்களுக்கு அறிவே இல்லையா?” என்று  தாக்கி, “அவன் நடிக்கிறான் டா… அரசியல் செய்யறதல்ல டா!” என கூறியுள்ளார்.

அவர் மேலும், “உங்கள் வாழ்க்கையை ஒரு நடிகனின் பின்னால் சென்று தொலைத்துக் கொள்ளாதீர்கள், அவர் பண்ணது தவறு, நேர்மையற்றது” என வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வெளியானதிலிருந்து, பக்கத்து மாநிலத்தவர் கூட உணர்ச்சியோடு, உண்மையைச் சொல்கிறார் என்ற கமெண்டுகள் பெருமளவில் எழுந்துள்ளன. “நாம் தான் சினிமா மோகத்தால், பாதிப்பை ஏற்படுத்தியவரையே மீண்டும் ஆதரிக்கிறோம்” என்ற வருத்தம், இந்த வீடியோவின் பின்னணி கருத்துகளாக பேசப்பட்டு வருகிறது.