கரூர் துயரச் சம்பவம் குறித்து நடிகர் விஜய் , “ஐந்து மாவட்டங்களில் கூட்டம் நடத்தியுள்ளோம், எங்கும் நடக்காத அசம்பாவிதம் கரூரில் மட்டும் நடந்தது” ஏன் என கேட்ட கேள்வி கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்குப் பதிலாக, சமூக வலைதளங்களில் பலரும் “கரூர் மட்டுமல்ல, விஜய் செல்லும் பல இடங்களில் தொண்டர்கள் கட்டுப்பாடின்றி நடந்து, சேதங்கள் ஏற்படுகின்றன” எனக் கூறி, சமீபத்தில் கோயம்புத்தூரில் நடந்த நிகழ்வின் வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். அந்த வீடியோவில், விஜயை காண ஓடிவந்த கூட்டத்தில் பலர் தடுக்கி கீழே விழுகிறார்கள்; ஆனால் ஒருவர் கூட கீழே விழுந்தவர்களை தூக்காமல், அப்படியே அவர்களை மிதித்து, மேலே ஏறிச் செல்வது போலக் காணப்படுகிறது.
இந்தக் காட்சியைப் பார்த்த நெட்டிசன்கள், “இவனுக்கு எல்லா கூட்டத்திலும் இப்படித்தான் நடக்குது… சைக்கோ கூட்டம் இதுதான்”, “கீழே விழுந்தவர்களையே மிதிக்கிறதுதான் இந்த தொண்டர்களின் குணமா ?”, “விஜயும், நிர்வாகிகளும் மாற வேண்டியதில்லை, அவருடைய தொண்டர்களின் மனநிலையே பெரிய பிரச்சனை” என கடுமையாக விமர்சிக்கின்றனர். இதே போன்ற சம்பவம்தான் கரூரிலும் நடந்ததாகவும், ஆனால் அது உயிரிழப்பில் முடிந்ததால் உலகம் பார்த்ததாகவும் கூறுகின்றனர். “இந்த மனநிலை கொண்டவர்களை வைத்துத்தான் இனியும் அரசியல் நடத்தப் போகிறீர்களா?” என்ற கேள்வியை அவர்கள் எழுப்பி, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
எல்லாரும் கரூர் சம்பந்தமாக குறிப்பிட்டு பேசறோம் ஆனால் அது உண்மை கிடையாது இவனுக்கு எல்லா கூட்டத்திலும் இப்படித்தான் நடந்துக்கிறானுங்க…
சைக்கோ இவனுங்க ஏன் சொல்றானா இந்த வீடியோ ஆரம்பிச்ச உடனே பாருங்க எத்தனை பேர் கீழே விழுகிறார்கள் என்று ஆனால் ஒருத்தன் கூட உதவி செய்யலை.. pic.twitter.com/QhorG6cRmb
— இளமாறன் பிரகாஷ்🖤♥️ (@MPRAKASH848814) October 3, 2025
