கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் நிகழ்த்திய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், 30க்கும் மேற்பட்ட பொதுமக்களின் உயிரிழப்புக்கு வழிவகுத்தது. இந்த சோகமான சம்பவம் தமிழகத்தில் மட்டுமல்லாது நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
இதன் பின்னணியில், இந்த நெரிசல் மற்றும் உயிரிழப்புக்கு யார் பொறுப்பு? தவெக தலைவரா அல்லது காவல்துறையை பொறுப்புடைய ஆளுங்கட்சியா என்ற விவாதம் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இந்நிலையில், விபத்துக்கு முன்பே விஜய் அவர்கள் கடந்த வாரம் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், “எங்களை காண மக்கள் அதிகமாக வரக்கூடும், பெரிய இடம் தேவை. ஆனால் குறுகிய இடத்தை மட்டும் கொடுக்கிறீர்கள்.
View this post on Instagram
“>
நாங்க நல்ல இடம் கேட்டாலும், தர மறுக்கிறீர்கள். உங்களின் நோக்கம் என்ன?” என ஆளுங்கட்சியை நேரடியாக விமர்சிக்கிறார். இதனை மேற்கோளாக காட்டும் தவெக ஆதரவாளர்கள், இந்த நெரிசல் சம்பவத்துக்கு மாநில அரசு மற்றும் நிர்வாகத்தையே நேரடியாகக் காரணமாகக் கூறி வருகிறார்கள். இதனால், இந்த துயர சம்பவம் குறித்து அரசியல் சூழ்நிலை கடுமையாக விவாதம் ஏற்பட்டுள்ளது.
