தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக பல நிறுவனங்களை மிரட்டி ரூ.6,060.50 கோடி நிதி பெற்றது வெளிச்சத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தொழிலதிபர்கள், வரி ஏய்ப்பாளர்கள், குற்றவாளிகளிடம் பாஜக லஞ்சம் வாங்குவதாக சித்தராமையா விமர்சித்துள்ளார்.

“Electoral Bonds Powder ( வெள்ளையாக்கப்படும்” என்ற வாசகத்துடன் X-ல் பதிவிட்டுள்ள அவர், தொழிலதிபர்களிடம் பெற்ற நன்கொடைகளுக்கு ஈடாக நாட்டின் வளங்களை கொள்ளையடிக்க பிரதமர் மோடி உதவியதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், கருப்புப் பணத்தை வெள்ளையாக்க புதிய வழி இது எனவும் விமர்சித்துள்ளார்.