Redmi-A1 போனின் விலையானது ரூ.5,699 ஆகும். இதில் 5000mAh பேட்டரி கிடைக்கும். போனில் 5.45 இன்ச் HD+ டிஸ்ப்ளே இருக்கிறது. புகைப்படம் எடுக்க 5MP பின்புறம் மற்றும் 2MP செல்பி கேமரா இருக்கிறது. மேலும் போனில் SC 9863a Octa-core செயலி பொருத்தப்பட்டிருக்கிறது. அதேபோல் Redmi A2 போன் ரூ.5,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இப்போனில் 5000mAh பேட்டரி இருக்கிறது. அதோடு போனின் டிஸ்பிளே 6.5 இன்ச் HD+ ஆகும். போட்டோ எடுப்பதற்கு 8MP பின்புறம் மற்றும் 5MP செல்ஃபி கேமரா இருக்கிறது. இது தவிர்த்து MediaTek Helio A36 செயலியானது பொருத்தப்பட்டு உள்ளது.

Micromax In 2C போனின் விலையானது ரூ.5,999 ஆகும். இதில் 5000mAh பேட்டரியானது கிடைக்கும். இப்போனில் 6.52 இன்ச் HD+ டிஸ்ப்ளே  மற்றும் போட்டோ எடுப்பதற்கு 8MP பின்புறம், 5MP செல்ஃபி கேமரா இருக்கிறது. மேலும் போனில் Unisoc T610 செயலியானது பொருத்தப்பட்டு உள்ளது.

அமேசானில் இருந்து Nokia C12 போனை ரூ.5,699க்கு வாங்கிக்கொள்ளலாம். அத்துடன் போனில் 6.3 இன்ச் HD+ டிஸ்ப்ளே இருக்கிறது. போட்டோ எடுக்க 8MP பின்புறம் மற்றும் 5MP செல்ஃபி கேமரா உள்ளது. மேலும் போனில் Unisoc 9863A1 செயலி பொருத்தப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து Nokia C01 Plus 4G போனின் விலையானது ரூ.5,999 ஆகும். போனில் 3000 mAh பேட்டரி இருக்கிறது. இது 6.3 இன்ச் HD+டிஸ்பிளேவை கொண்டு உள்ளது. போட்டோ எடுக்க 8MP பின்புறம் மற்றும் 5MP செல்ஃபி கேமரா உள்ளது. அத்துடன் போனில் Unisoc 9863A1 செயலி பொருத்தப்பட்டு உள்ளது.