கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில்காட்டு யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சுற்றி திரிந்து வனப்பகுதியை ஒட்டி இருக்கும் விவசாய நிலங்களுக்குள் இரவு நேரத்தில் புகுந்து அட்டகாசம் செய்கிறது. நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு காட்டு யானை விவசாய நிலங்களுக்குள் புகுந்து ராகு உள்ளிட்ட பயிர்களை தின்றும் விதித்தும் நாசப்படுத்தி அங்கேயே நின்றது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் பட்டாசு வெடித்தும், சத்தம் போட்டும் யானையை விரட்டியுள்ளனர். அந்த யானை கோட்டட்டி கிராமத்தில் இருக்கும் தார் சாலையில் ஒய்யாரமாக நடந்து சென்றதை வாலிபர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இதுகுறித்த அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பட்டாசு வெடித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.