வங்கியில் கடன் பெற்று தருவதாக செபி  உதவி மேலாளரிடம் 25 லட்ச ரூபாய் மோசடி செய்த பெண் வழக்கறிஞரை தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார்  கைது செய்தனர்.

தேனி மாவட்டம் சின்னமனுர் பகுதியை  சேர்ந்தவர் பகவதி ராஜா மும்பையில் உள்ள செபி அமைப்பில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். கேரளவில் எஸ்டேட் வாங்குவதற்காக அதன் உரிமையாளரிடம் 92 லட்சம் கொடுத்து கிரய ஒப்பந்தம் செய்த பகவதி ராஜா மீதமுள்ள ஒரு கோடியே எட்டு லட்சத்தை கடன் வாங்க முடிவு செய்து வழக்கறிஞர் சித்ரா மோகன் தம்பதியை அணுகியுள்ளார். தங்களுக்கு கமிஷன் கொடுத்தால் எளிதில் கடன் பெற்று கொள்ளலாம் என அந்த தம்பதி சொன்ன ஆசை வார்த்தையை நம்பி சித்ரா சொன்ன வங்கிக் கணக்கில் பகவதி ராஜா 24 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயும் செலுத்தியுள்ளார்.

அனால் அவர்கள் கூறியபடி கடன் வாங்கி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதன் மூலம் தான் ஏமாற்றப்பட்டது உணர்ந்த பகவதி ராஜா தேனி மாவட்ட காவல் நிலைய கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்ட தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சித்ராவிடம் மேற்கொண்ட விசாரணையில் இதேபோன்று ஐந்து  பேரை ஏமாற்றி  ஒன்றரை கோடி ரூபாய் வரை அவர்கள் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் சித்ராவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.