கோவையை சேர்ந்த பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா சென்ற சில மாதங்களாகவே இணையத்தில் பாப்புலரான நபராக உள்ளார். அவரை சந்திக்க பல்வேறு பிரபலங்களும் சென்று வந்தனர். திமுக எம்பி கனிமொழி ஷர்மிளாவின் பேருந்தில் பயணித்தது குறித்து பஸ் ஓனர் உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஷர்மிளா பணியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இதையடுத்து ஷர்மிளா குடும்பத்தை அழைத்து நடிகர் கமல்ஹாசன் அவருக்கு கார் பரிசாக கொடுத்தார் என தகவல் வெளியானது. எனினும் தற்போது ஷர்மிளாவின் அப்பா அளித்துள்ள பேட்டியில் “கமல் கார் கொடுக்கவில்லை. 3 லட்சம் ரூபாய்கு காசோலை கொடுத்து கார் வாங்க கூறினார். அந்த செக் அப்படியேதான் வைத்திருக்கிறேன். அவர் கார் கொடுத்தார், 13 லட்சம் கொடுத்தார் என ஊடகத்தில் தவறாக செய்திகள் வருகிறது” என ஒரு யூடியூப் சேனலுக்கு போனில் அளித்த பேட்டியில் ஷர்மிளாவின் அப்பா கூறி உள்ளார்.