நாடு முழுவதும் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அனைத்து முஸ்லிம் மக்களும் பரபரப்புடன் காணப்படுகின்றனர். அதோடு பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சென்ற ஒரு வாரமாகவே தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் ஆடு விற்பனையும் களைகட்டி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பக்ரீத் பண்டிகைக்கு ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 30ம் தேதியும் அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசிடம் மனிதநேய மக்கள் கல்வித் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏனெனில் ஜூலை 1 மற்றும் ஜூலை 2 ஆகிய 2 தினங்களும் வார இறுதி நாட்களாக இருப்பதால் ஜூன் 30-ம் தேதியும் தமிழக அரசின் சார்பாக விடுமுறை அறிவிக்கப்பட்டால் முஸ்லிம் அரசு பணியாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப ஏதுவாக இருக்கும் என்று கோரிக்கை வைக்கப்பட்டடு இருக்கிறது. ஆகவே முதல்வர் இதில் முழுகவனம் செலுத்தி ஜூன் 30ம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.