கடந்த 1978-ம் வருடம் வாணி கணபதி என்பவரை தான் உலகநாயகன் கமல்ஹாசன் முதல்  முதலில் திருமணம் செய்து கொண்டார். 10 வருடங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த சூழலில், 1988-ம் ஆண்டு அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதன்பின் அதே 1988-ம் வருடத்தில் பிரபல நடிகை சரிகாவை காதலித்து 2-ம் திருமணம் செய்துகொண்டார் கமல். இவர்களுக்கு பிறந்தவர்கள் தான் நடிகைகள் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன்.

சென்ற 1988-ம் வருடம் திருமணம் செய்துகொண்ட கமல்-சரிகா ஜோடி கடந்த 2004-ம் வருடம் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 1988-ம் வருடம் நடைபெற்ற கமல்ஹாசனின் 2-வது திருமணத்தை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான் முன்நின்று நடத்தி உள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இப்போது வெளியாகி உள்ளது.