இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதில், ஒரு பசு மாடு தனது கன்றுடன் சாலையில் அமைதியாக நடந்து செல்கிறது. அப்போது, சாலையோரம் இரு சிறுவர்கள் நின்று கொண்டிருக்கின்றனர். முதலில், மாடு சிறுவர்களை முட்டுவது போல் சென்று, பின்னர் திரும்பி வந்துவிடுகிறது. ஆனால், ஒரு சிறுவன் குனிந்திருப்பதைப் பார்த்த மாடு மீண்டும் அவனை முட்ட முயல்கிறது. இதனால் பயந்த சிறுவன், தனது சகோதரனை அழைத்துக்கொண்டு அங்கிருந்து நகர முயல்கிறான்.

View this post on Instagram

A post shared by APC (@apc_media_)

ஆனால், எதிர்பாராதவிதமாக சிறுவன் கீழே விழுந்துவிட, மாடு அவனை முட்டி தூக்கி வீசுகிறது. இதைக் கண்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஓடி வந்து மாட்டை விரட்டி, சிறுவர்களைக் காப்பாற்றுகின்றனர். இந்தக் காணொளி இணையவாசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.