கன்னி ராசி அன்பர்களே, 

இன்று மனதிற்கு பிடித்தமான பொருள் சேர்க்கை ஏற்படும். மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும். சந்திராஷ்டமம் முடியாததால் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. நண்பர்களின் ஆலோசனை மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். சுயநலம் கருதாமல் உழைப்பீர்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சி பாதையில் செல்லும். எதிர்பார்த்த பணவரவு கண்டிப்பாக கிடைக்கும். பயன் தராத பொருட்களை  வாங்க வேண்டாம்.

இன்று எதிலும் எச்சரிக்கையாக செயல்படுங்கள். காரிய தடை தாமதம் ஏற்பட்டு பின்னர் சரியாகும் . மன தைரியம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திடீர் பயணங்களை சந்திக்க வேண்டி இருக்கும். போராட்டத்தைக் கண்டு அஞ்சாமல்  வெற்றி பெறுவீர்கள்.நினைத்த  காரியங்கள் நினைத்தபடி நடக்கும். குலதெய்வத்தின் அருள் துணையாக இருக்கிறது. இந்த நாள் உங்களுக்கு இனிய கனவுகள் மேம்படும் நாள் என்றே சொல்லலாம்.

இன்று பெண்கள் கருத்துக்களை பரிமாறும் போது கவனமாக இருங்கள். சமையலின் போது கவனமாக இருங்கள். தேவையற்ற பணிகளில் ஈடுபட வேண்டாம். அக்கம் பக்கத்தினரை அனுசரித்துச் செல்லுங்கள். இன்று மாணவர்கள் தயவு செய்து சக மாணவர்களிடம் அனுசரித்து செல்லுங்கள். படிப்பில் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும் சிந்தித்து செய்யும் செயல்களால் வெற்றி கிடைக்கும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள் நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  வடக்கு

அதிர்ஷ்ட எண்  :  6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்   : சிவப்பு மற்றும் பச்சை நிறம்