கன்னி ராசி அன்பர்களே,

இன்று தன வரவு சீராக இருக்கும். இறைவழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். இஷ்ட தெய்வத்தின் அருளை இன்று பெறுவீர்கள். திட்டமிட்ட பணிகளில் வெற்றி பெறுவீர்கள். வெளிவட்டார தொடர்பு விரிவடையும். நிலுவை பணங்கள் வசூல் ஆகும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் சில பணிகளை எச்சரிக்கையுடன் செய்யுங்கள்.

மனக்கலக்கங்களும் குழப்பங்களும் ஏற்படும். நட்பு ஒன்று பகையாகும். பகை ஒன்று நட்பாகும். முடியும் என்று நினைத்த காரியம் முடியாமல் போகலாம். பொறுமையுடன் இருப்பது நல்லது. உங்கள் பணியை மட்டும் செய்யுங்கள். தேவையற்ற விஷயங்களில் ஈடுபட வேண்டாம். இன்று பெண்களுக்கு பெரிய பிரச்சனைகள் எதுவும் இல்லை.

பணிசுமை அதிகமாக இருக்கும். கோவில் குளங்களுக்கு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். பயன்படுத்திக் கொள்ளுங்கள். பெண்கள் இனிமையாக பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். இன்று மாணவர்கள் புதுப்புது யோசனைகளை செயல்படுத்துவீர்கள். கல்வியில் அக்கறை கொள்ளுங்கள். இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: ஐந்து மற்றும் ஒன்பது
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் பச்சை நிறம்