சிம்ம ராசி அன்பர்களே,

இன்று கண்டிப்பாக எதிர்பாராத சில யோகங்கள் ஏற்படும். கால அவகாசம் ஏற்படுத்திய பணிகள் சூடுபிடிக்க துவங்கும். யாரிடமும் சண்டை சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம். தொலைபேசியினால் சின்ன சின்ன சிக்கல்கள் ஏற்படும். அளவுடன் பேசி பழகுவது நல்லது. பண பரிவர்த்தனைகளில் பாதுகாப்பை பின்பற்றுங்கள். சத்தான உணவை எடுத்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியம் சீராகும்.

காலை நேரத்தில் சுறுசுறுப்பாகவும் மாலை நேரத்தில் சோர்வாகவும் காணப்படுவீர்கள். உணவு விஷயங்களில் கட்டுபாடு வேண்டும். நட்பால் நல்ல காரியம் நடக்கும். கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். புதிய தொழில் செய்யலாமா என்ற எண்ணம் மேலோங்கும். பெண்கள் இன்று பிரச்சனைகளை துல்லியமாக ஆராய்வீர்கள்.

ஆலயங்களுக்கு சென்று வருவீர்கள். இஷ்ட தெய்வத்தின் அருள் சிறப்பாக இருக்கிறது. நிம்மதியான சூழல் உருவாகும். இன்று மாணவர்கள் புதுப்புது விஷயங்களை யோசிப்பீர்கள். கல்வி மீது முழு அக்கறை கொள்வீர்கள். படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: இரண்டு மற்றும் ஏழு
அதிஷ்டம் நிறம்: மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்