
கர்நாடகாமாநிலத்தில் உள்ள தனியார் நிறுவன நிர்வாகப் பொறுப்புகளில் 50 சதவீதமும், நிர்வாகமற்ற பொறுப்புகளில் 70 சதவீதமும் கன்னடர்களுக்கு ஒதுக்கீடு செய்ய கொண்டுவரப்பட்ட மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை அடுத்து, இந்த முடிவில் இருந்து கர்நாடகா அரசு பின்வாங்கி இருக்கிறது.
IT நிறுவனங்களின் சங்கமான NASCOM இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில், இந்த மசோதா விரிவான ஆலோசனைக்குப் பிறகே செயல்படுத்தப்படும் என மாநில அமைச்சர் பிரியங்க் உறுதி அளித்துள்ளார்.