வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கனமழை காரணமாகப் புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்டத்தில் நாளை (நவம்பர் 18, செவ்வாய்க்கிழமை) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இன்று  (நவ. 17) காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும், நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது காரைக்கால் மாவட்ட நிர்வாகம் முதலாவதாக நாளைக்கான விடுமுறையை அறிவித்துள்ளது.

திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் தற்போது கனமழை கொட்டி வருவதால், அங்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. இந்த மாவட்டங்களின் நிர்வாகங்கள் இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.