மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்த கனமழையில் பல இடங்களில் வெள்ளநீர் ஆங்காங்கே ஆறு போல காட்சியளிக்கிறது. இதனால் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். ஒருசில இடங்களில் மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சிலர் வீட்டிற்குள் வெள்ளநீர் புகுந்ததால் டிவி, ஃப்ரிட்ஜ், கார் உட்பட பல விலை உயர்ந்த பொருட்கள் சேதமானது.

மேலும்  கனமழையால் 4 நாட்களில் 350 ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக தெற்கு ரயில்வேக்கு ரூ. 35 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ரயிலில் முன் பதிவு செய்தவர்களுக்கு கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த கட்டணத்தைப் பெற ரயில் நிலையங்களில் தற்போது சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு சென்று பயணிகள் பணத்தை பெற்றுக்கொள்ளலாம்