உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள லோனி பகுதியில் ஜாகிர் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கின் மர்மத்தை அம்மாநில காவல்துறை தற்போது துலக்கியுள்ளது.
மேலும் ஜாகிரை கொலை செய்தது வேறு யாரும் அல்ல, அவருடைய காதலியான கிரண் மற்றும் அவரது சகோதரி பாதிக்கப்பட்ட பெண்ணின் சித்தி ஆகிய இருவரும்தான் என்பது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இந்த கொடூரக் கொலைச் சம்பவம் அரங்கேறிய போது, கிரணின் மகள் கதவில் இருந்த ஒரு சிறிய துவாரத்தின் வழியாகத் தன் தாயும், சித்தியும் சேர்ந்து ஜாகிரைக் கொலை செய்யும் அதிர்ச்சியூட்டும் காட்சியை நேரில் பார்த்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் இந்த சிறுமியின் சாட்சியம் மற்றும் போலீசாரின் தீவிர விசாரணையின் மூலம் குற்றவாளிகளின் இந்த பகீர் செயல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. தற்போது இந்த கொலை வழக்கு தொடர்பாகப் போலீசார் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
