தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய முதல் மாநாட்டினை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். நடிகர் விஜய் கட்சி மாநாட்டை நடத்தி முடித்ததிலிருந்து நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள். அதாவது நடிகர் விஜய் கட்சி தொடங்கிய புதிதில் சீமான் அவருக்கு ஆதரவு கொடுத்த நிலையில் முதல் மாநாட்டினை நடத்தி கொள்கைகளை அறிவித்த பிறகு தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். அதாவது நடிகர் விஜயின் கொள்கைகளை அழுகிய கூமுட்டை என்று கூறிய அவர் லாரியில் அடிபட்டு செத்துவிடுவார் போன்ற கடுமையான வார்த்தைகளை கொண்டு விமர்சித்தார்.
அதன்பிறகு நாம் தமிழர் கட்சியிலிருந்து நிர்வாகிகள் பலர் விலகி வரும் நிலையில் அவர்கள் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைவதாக கூறப்படுகிறது. இது சீமானுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் நிலையில் விஜயை தொடர்ந்து விமர்சிக்கிறார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் தற்போது விஜய் ரசிகர்களை சீண்டி ஒரு எக்ஸ் பதிவை போட்டுள்ளார். அந்த பதிவில் மழைன்னு சொல்லி பள்ளிக்கூடத்திற்கு விடுமுறை விட்டதும் போதும் விஜய் ரசிகர்கள் பூராம் கதறிட்டு திரியுறானுங்க. டேய் ஒழுங்கா போய் வீட்டுப்பாடம் எழுதுங்கடா என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவு வைரலாகி வரும் நிலையில் தமிழக வெற்றி கழகத்தினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மழைன்னு சொல்லி பள்ளிக்கூடத்துக்கு விடுமறை விட்டதும் போதும் இந்த விஜய் ரசிக தம்பிகள் பூராம் கதறிட்டு திரியுறானுக !
டேய் ஒழுங்கா வீட்டுப்பாடம் எழுதுங்கடா !
— Duraimurugan (@Saattaidurai) November 22, 2024
