ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் முகமது  டெய்ஃப் ஒரு கண் ஒரு கை இரண்டு கால் இல்லாமல் வீல்சேரில் அமர்ந்து இஸ்ரேல் நாட்டை அலற விட்டு வருகின்றார். சக்கர நாற்காலியில் இருந்த தலைவர் 2002 ஆம் ஆண்டு முதல் ஹமாசின் ராணுவ பிரிவின் தலைவராக இருந்து வருகின்றார். இஸ்ரேல் நாட்டில் மிகவும் தேடப்பட்டு வரும் பயங்கரவாதியாக இருக்கும் இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேல் தாக்குதலில் படுகாயம் அடைந்தார்.

அந்த தாக்குதலில் இவரின் ஒரு கண், ஒரு கை மற்றும் இரண்டு கால்களை இழந்தார். அந்த கொடூர தாக்குதலில் அவர் தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளையும் இழந்தார். இஸ்ரேல் அரசு பலமுறை இவரை கொலை செய்ய மூன்று போது அதில் தப்பிய முகமது இப்போது அடுத்த தாக்குதலை தொடங்கியுள்ளார். அதன்படி கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் நாட்டில் இறங்கிய ஹமாஸ் படையினர் கொடூர தாக்குதலை நடத்திய நிலையில் இருபது நிமிடத்தில் 5,000 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவினார். அது மட்டுமல்லாமல் இஸ்ரேல் நாட்டிலும் புகுந்து தாக்குதல் நடத்தி வருகின்றார். இதில் 3000 திற்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.