ஹமாஸ் அமைப்பினர் காசாவை மையமாக வைத்து  ஐந்து நகரங்களை உள்ளடக்கி  இஸ்ரேலின் மேற்கு ஓரத்தில்  அமைந்துள்ள பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்கள். ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஒரு 20 வருடங்களாகவே பாலஸ்தீன மக்களிடம் மிகவும் செல்வாக்கு பெற்ற போராளிகளாக வளர்ந்து வருகிறார்கள். இவர்களுக்கான நிதி ஆதாரங்களை முடக்கினால் தான் அவர்களின் செயல்பாடுகளை முழுமையாக முடக்க முடியும் என கருதப்பட்ட நிலையில் இஸ்ரேல் ராணுவம் அதனை கச்சிதமாக செய்துள்ளது.

இஸ்ரேல் ராணுவத்தை பொறுத்தவரை விமானத்தின் மூலம் காசா நகரத்தின் மீது தாக்குதலை நடத்தி வருகின்றார்கள்.  குறிப்பாக ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் இருக்கும் கட்டிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

நேற்று கூட நிதியமைச்சர் நாங்கள்  தாக்குதல் நடத்தி கொன்றுள்ளோம் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ள நிலையில், இன்று அவர்களின் நிதி ஆதாரத்த்தின் 90% பண பரிவர்த்தனையும்,  கிரிப்டோ கரன்சி இணையத்தையும் முடக்கி உள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.