சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த சுஜாதா என்ற பெண், தனது கணவர் பாலசுப்பிரமணியனுடன் கர்நாடக மாநிலம் குடகு (கூர்க்) பகுதியில் உள்ள புகழ்பெற்ற துபாரே யானைகள் முகாமிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அங்குள்ள காவேரி ஆற்றில் சுஜாதா குளித்துக் கொண்டிருந்தபோது, பாகன்களால் குளிப்பாட்ட அழைத்து வரப்பட்ட ஒரு யானை எதிர்பாராதவிதமாக திடீரென நிலைதடுமாறி சுஜாதாவின் மீது பயங்கரமாக சாய்ந்து விழுந்தது.
#Kodagu Sad incident occurred while #ElephantBathing at #DubareCamp 33-year-old woman from #Chennai died on the spot@aranya_kfd@eshwar_khandre @BoskyKhanna @prajna_gr pic.twitter.com/73skY5l9ZU
— Amit Upadhye (@AmitSUpadhye) May 18, 2026
இதில் பலத்த காயமடைந்த சுஜாதாவை, அவரது கணவர் பாலசுப்பிரமணியன் மற்றும் அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்; ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலா சென்ற இடத்தில் கணவனின் கண்முன்னே யானை மிதித்து பெண் உயிரிழந்த இந்த கோர விபத்து குறித்து குஷால்நகர் கிராமப்புற போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
