
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே ஆழிமதுரை என்ற கிராமத்தில் நேற்று இரண்டு சிறுமிகள் கண்மாயில் மூழ்கி உயிரிழந்த சம்பவம்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததோடு அவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவித்து உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, சிவகங்கை மாவட்டம் ஆழி மதுரையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.
இந்த பள்ளியில் சோபியா என்ற 8 வயது சிறுமி மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். அதேபோன்ற கிரிஸ்மிகா என்ற 4 வயது சிறுமி அங்கன்வாடி மையத்தில் படித்து வந்தார். இவர்கள் இருவரும் நேற்று பள்ளிக்கு அருகே உள்ள கண்மாய்க்கு சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்த செய்தியை கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். இந்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுமிகளின் பெற்றோருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் உயிரிழந்த சிறுமிகளின் பெற்றோருக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.