வெனிசுலா நாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்கள் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கி எடுத்துள்ள நிலையில், அந்த இயற்கை சீற்றத்தின் கொடூர முகத்தை அப்படியே அச்சு அசலாகப் பிரதிபலிக்கும் புதிய வீடியோ ஒன்று தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி நெட்டிசன்களை உறைந்து போக வைத்துள்ளது.

அந்தப் பயங்கரமான வீடியோவில், நபர் ஒருவர் உயரமான இடத்திலிருந்து நிலநடுக்கத்திற்கு பிந்தைய ஒட்டுமொத்த நகரத்தின் காட்சியைத் தனது கேமராவில் சுற்றிக்காட்டுகிறார்.

அதில், நிலநடுக்கத்தின் கோரத் தாக்கத்தால் ஒட்டுமொத்த நகரமும் அடர்ந்த புகைமூட்டமாகவும், பெரும் தூசி மண்டலமாகவும் மாறியிருப்பதுடன், ஆங்காங்கே சிதைந்து உருக்குலைந்து போன வானளாவிய கட்டிடங்கள் காட்சியளிப்பது பார்ப்பவர்களின் நெஞ்சை பதற வைக்கிறது.

“>

பார்ப்பவர்களை உலுக்கி எடுக்கும் இயற்கை பேரழிவின் இந்த அசல் நிமிடங்களும், திகிலூட்டும் காட்சிகளும் தற்பொழுது இணையப் பக்கங்களில் வைரலாகி வருகிறது.