தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறித்து திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் “தூத்துக்குடி வந்தால் சட்டை கிழியும்” என்று பேசிய மிரட்டல் பேச்சு தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், இப் பிரச்சினையில் தவெக-வுக்கு ஆதரவாகக் காங்கிரஸ் கட்சி திடீரெனக் களமிறங்கியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் எம்பியான மாணிக்கம் தாகூர், அனிதா ராதாகிருஷ்ணனின் அநாகரீகமான பேச்சுக்குத் தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்ததோடு, திமுக தலைமைக்கு அதிரடியான கேள்விகளையும் முன்வைத்துள்ளார்.

​செய்தியாளர்களைச் சந்தித்த மாணிக்கம் தாகூர் எம்பி, “அனிதா ராதாகிருஷ்ணனின் இந்த மிரட்டல் பேச்சை திமுக தலைமை அங்கீகரிக்கிறதா? அவரது பேச்சை திமுக உடனடியாகக் கண்டிக்க வேண்டும்; அப்படி ஒருவேளை திமுக தலைமை அவரைக் கண்டிக்கத் தவறினால், காங்கிரசும் இதற்கு உரியப் பதிலடி கொடுக்கும்” என்று பகிரங்கமாக எச்சரித்துள்ளார். மேலும், எல்லையை மீறிப் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன் தனது பேச்சுக்கு உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். திமுக-வுக்கு எதிராகக் காங்கிரஸ் எம்பியே இவ்வளவு காரசாரமாகப் பேசியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.