சென்னையை அடுத்த முடிச்சூர் வரதராஜபுரத்தைச் சேர்ந்த கானா பாடகர்களான பரத் மற்றும் சீனு ஆகியோர் படப்பையில் உள்ள நண்பர் வீட்டில் தங்கியிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
பாடகர்களைக் கொன்றுவிட்டு தப்பியோடிய அந்த போதைக் கும்பலை உடனடியாகக் கண்டுபிடித்துக் கைது செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தை ஆளும் ‘பொய்க்கால் குதிரை’ அரசு, இதுபோன்ற குற்றச் சம்பவங்களைத் தடுக்கத் தவறிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் சாடியுள்ளார்.
இரண்டு இளைஞர்களை வெட்டிக் கொன்றுள்ள போதை ஆசாமிகளை உடனடியாகப் பிடித்துச் சிறையிலடைக்க வேண்டும் என்றும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
