தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் மறைந்த இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு இன்று தேமுதிக கட்சி அலுவலகத்தில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. முதலில் காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் தடையை மீறி பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தேமுதிகவினர் அமைதி பேரணி நடத்தினர்.

பின்னர் தேமுதிகவினர் கேப்டன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். அப்போது பிரேமலதா கேப்டன் நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அங்குள்ள கேப்டன் சிலையை கட்டிப்பிடித்து பிரேமலதா விஜயகாந்த் அழுதார். இதை பார்க்கும்போது அங்கிருந்த தொண்டர்களுக்கு கவலையை ஏற்படுத்தியது. மேலும் பிரேமலதா விஜய்காந்த் கண்ணீர் மல்கத் தன் கணவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.