
மெக்சிகோ நாட்டில் உள்ள குயிண்டினா ரோ மாகாணத்தில் கான்கன் என்ற நகர் உள்ளது. இங்கிருந்து டபாஸ்கோ நகருக்கு நேற்று ஒரு பேருந்து சென்றது. இந்த பேருந்தில் மொத்தம் 48 பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து எஸ் கார்சிகா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரியின் மீது பேருந்து பயங்கரமாக மோதியது.
இதில் பஸ் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.இது தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் 41 பயணிகள் சம்பவ இடத்தில் உடல் கருகி பலியாகினர். இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.