ஈரான் நாட்டின் அதிகாரப்பூர்வத் தேசியத் தொலைக்காட்சி ஹேக் செய்யப்பட்ட சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026, ஜனவரி 18 அன்று இரவு சுமார் 9:30 மணியளவில், அந்நாட்டின் முக்கிய செயற்கைக்கோள் அலைவரிசைகள் ஊடுருவப்பட்டு, சுமார் 10 நிமிடங்களுக்குப் போராட்டங்களுக்கு ஆதரவான காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன.
இது குறிப்பாக, 1979-ஆம் ஆண்டு ஈரானியப் புரட்சிக்குப் பிறகு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட முன்னாள் ஷா வம்சத்தின் இளவரசர் ரெசா பஹ்லவியின் வீடியோ செய்திகள் இதில் இடம்பெற்றன. “நீங்கள் ஈரானின் தேசிய ராணுவம், இந்த இஸ்லாமியக் குடியரசின் ராணுவம் அல்ல மக்கள் மீது துப்பாக்கிகளை நீட்டாதீர்கள்,” என்று அவர் ராணுவத்தினருக்கு வேண்டுகோள் விடுத்த காட்சிகள் நாடு முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளன.
BREAKING: Iran’s state TV hacked — Crown Prince Reza Pahlavi is now on air! pic.twitter.com/Obp6G4yKua
— Neo (@Realneo101) January 18, 2026
“>
இந்நிலையில் ஈரானில் தற்போது நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டங்கள், தற்போது அரசுக்கு எதிரான மாபெரும் புரட்சியாக மாறியுள்ளன. இந்த வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 5,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் போராட்டங்களைக் கட்டுப்படுத்த ஈரான் அரசு நாடு முழுவதும் இணையதள சேவையை முடக்கியுள்ள சூழலில், அதிஉயர்ந்த பாதுகாப்பு கொண்ட தேசியத் தொலைக்காட்சியே ஹேக் செய்யப்பட்டு எதிர்க்கட்சித் தலைவரின் வீடியோ ஒளிபரப்பப்பட்டது அந்நாட்டு அரசுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இந்தச் சம்பவம் ஈரானில் ஆட்சி மாற்றத்திற்கான குரல்களை மேலும் வலுப்படுத்தியுள்ளதோடு, சர்வதேச நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
