சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள், பறவைகள் மற்றும் செல்ல பிராணிகள் குறித்த வீடியோக்கள் தினம்தோறும் அதிக அளவில் இணையத்தில் பகிரப்பட்டு வரும் நிலையில் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் நாய் ஒன்று பூனைக்குட்டியின் எதிரே நின்று கொண்டிருக்கிறது. இரண்டு செல்லப் பிராணிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. முதலில் இரண்டும் இடையே ஏதோ மோதல் வெளித்த நிலையில் பூனையும் நாயும் கட்டிப் புரளுகிறது. அப்போது உடனே தன்னை விடுவித்து கொண்ட நாய் உடனே வேகமாக சுழலுகின்றது. இதனைப் பார்த்த பூனை புரியாமல் புலம்புகிறது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.