உத்தரப் பிரதேச மாநிலத்தில், குடும்பத் தகராறு காரணமாகக் கணவனை விடிய விடியக் கட்டிலில் வைத்து, கத்தியால் குத்தி மின்சார கரண்ட் கொடுத்த கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சஞ்சீவ் திவாரி என்ற வாலிபருக்கும், அவரது மனைவிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது; இந்த விவாதம் முற்றிய நிலையில், அந்தப் பெண் சஞ்சீவ் திவாரியைக் கட்டிலோடு சேர்த்து இறுக்கமாகக் கட்டிப் போட்டு, விடிய விடியக் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.

அதுமட்டுமின்றி, மின்சார வயரை வைத்து சஞ்சீவுக்கு கடுமையான கரண்ட் ஷாக் கொடுத்து சித்திரவதை செய்துள்ளார். திங்கட்கிழமை காலை போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சஞ்சீவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக கான்பூர் மருத்துவமனைக்கு அவசரமாக மாற்றப்பட்டுள்ளார். தற்பொழுது பாதிக்கப்பட்ட சஞ்சீவின் சகோதரர் கொடுத்த எழுத்துப்பூர்வமான புகாரின் அடிப்படையில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மனைவியைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.