மும்பையில் வாடகைக்கு வீடு தேடுபவர்கள் சந்திக்கும் விசித்திரமான மற்றும் ஏமாற்றமளிக்கும் ஒரு புதிய விசித்திரப் போக்கு குறித்து இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் ஒருவர் வெளியிட்ட அந்தப் பதிவில், அவரது தோழி ஒருவருடன் மும்பையில் வீடு பார்ப்பதற்காகச் சென்றபோது நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் விவரிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ஒரு வசதியான பெண் வீட்டு உரிமையாளர், வாடகைக்கு வரவிருந்த பெண்ணின் ‘நியூமராலஜி எண்’ என்ன என்று கேட்டுள்ளார்.

“>

இதனால் துரதிர்ஷ்டவசமாக, அந்த எண்ணை அடிப்படையாகக் கொண்டு, அந்தப் பெண்ணிற்கு வீடு தர மறுத்து அவர் நிராகரித்துள்ளார். இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளதுடன், மும்பை வீட்டு உரிமையாளர்களின் இத்தகைய விசித்திரமான நிபந்தனைகள் குறித்து நெட்டிசன்கள் பலரும் தங்களது குமுறல்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

அதோடு அந்தப் பதிவின் கமெண்ட் பிரிவில், 4 மற்றும் 7 ஆகிய எண்கள் ஒரு நல்ல சேர்க்கை என்றும், வீட்டு உரிமையாளர் ஒரு நல்ல வாடகைதாரரை இழந்துவிட்டார் என்றும் சிலர் வாதிட்டனர். அதே நேரத்தில், பாதி பேர் இது நல்ல சேர்க்கை என்றும், மீதி பேர் இது தவறான சேர்க்கை என்றும் கூறுவதைப் பார்க்கும்போது எண்கணிதம் பற்றி உண்மையில் யாருக்கும் எதுவும் சரியாகத் தெரியவில்லை என்றும், இந்தச் செயல் மிகவும் வேடிக்கையாக உள்ளதாகவும் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.