கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியில் இருக்கும் விவசாய கணக்கில் ஆணின் சடலம் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டனர். அவரது கை கால்கள் மற்றும் வாய் பகுதி கட்டப்பட்ட நிலையில் இருந்தது. அந்த உடலை போலீசார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டார் முனியப்பன் ஊரைச் சேர்ந்த சுப்பிரமணி என்பதும், அவர் நிதி நிறுவனம் நடத்தி வந்ததும் தெரியவந்தது. எனவே தொழில் போட்டி காரணமாக சுப்ரமணியை யாராவது கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமுள்ளதா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
