அசாம் மாநில காங்கிரஸ் எம்எல்ஏ பரத் சந்திர நரா கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் பாஜகவில் இணையும் போக்கு தற்போது அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் அசாம் காங்கிரஸ் செயல் தலைவராக இருந்த ராணா கோஸ்வாமி உள்ளிட்டோர் சமீபத்தில் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் ஐக்கியமான நிலையில், தற்போது பாரத் சந்திர நராவும் விலகியுள்ளார். இது காங்கிரசுக்கு மேலும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.