வெளிநாடுகளில் இந்தியர்களை குறிவைத்து நடைபெறும் இனவெறி தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடையில் பணியாற்றி வந்த இந்திய இளைஞரை ஒரு வெளிநாட்டவர் திடீரென தாக்க முயன்றார். ஆரம்பத்தில் தப்பிக்க முயன்ற அந்த இளைஞர், தாக்குதல் தீவிரமாகியதும் கடைக்குள் சென்று ஒரு மட்டையுடன் திரும்பி வந்து தாக்கியவரை எதிர்த்து அடிக்க முயன்றார். உடனே பயந்த வெளிநாட்டவர் தப்பி ஓடினார்.
இந்த சம்பவத்தின் வீடியோவில், வெளிநாட்டவர் தொடர்ந்து அறைவதை கண்டு இந்திய இளைஞர் முதலில் பின் வாங்கினார். ஆனால் வெளிநாட்டவர் தன்னுடைய ஆதிக்கத்தை காட்ட கதவை உதைத்து மிரட்டியபோது, இந்தியர் கடைக்குள் சென்று மட்டையுடன் வெளியே வந்தார். அவர் மட்டையை கொண்டுவந்ததும் பயந்து போன தாக்குதல்காரர் அங்கிருந்து பயந்து ஓடினார். இந்த காட்சி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி பல்வேறு எதிர்வினைகளை கிளப்பியுள்ளது.
Og out there tweakin wit the Indian lmaooo pic.twitter.com/EuGFv206ya
— batman 🦇 (@MarioBabyFrmDaG) August 14, 2025
“>
நெட்டிசன்கள் கடும் கோபத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். “வாடிக்கையாளர் சேவை ஊழியர் மீது கைவைத்ததற்கு இது சரியான பாடமாகும்” என சிலர் பாராட்டியுள்ளதுடன், “இனவெறி தாக்குதல்களை ஒழிக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பலரும் வலியுறுத்தியுள்ளனர். வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளும் இச்சம்பவத்தை அடுத்து தீவிரமாக எழுந்துள்ளன.
