
நாடாளுமன்றத்தில் திமுக எம்பி கனிமொழி கேள்வி ஒன்றை எழுப்பினர். அதாவது கடந்த 10 ஆண்டுகளில் வெப்பத்தின் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து கேள்வி கேட்டார். இதற்கு மத்திய இணை மந்திரி டாக்டர்.ஜிதேந்திர சிங் பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கத்தால் 2013 ஆம் ஆண்டில் 1216 பேரும் 2014 ல் 1248 பேரும் 2015 ல் 1908 பேரும் 2016 ல் 1338 பேரும் 2017-ல் 1127 பேரும் 2017 ல் 890 பேரும் 2020 ல் 530 பேரும் 2021 ல் 374 பேரும் 2022 730 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதிலும் குறிப்பாக தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் வெப்பத்தின் தாக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை மற்ற மாநிலத்தில் விட குறைவு என்றார். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 5 பேர் மட்டுமே இறந்துள்ளதாக கூறினார். இதையடுத்து ஆந்திராவில் தமிழ்நாட்டை விட அதிகபட்சமான உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளனர் என்றார்.