இன்றைய காலகட்டத்தில் தினந்தோறும் இணையத்தில் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் குறித்த வீடியோக்கள் அதிகளவில் பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோவில் நாய்க்குட்டிகள் அழகாக குளிர் காய்கின்றன.

குளிரில் நடுங்கும் நாய்க்குட்டிகளை பார்த்த கருணை மனம் படைத்த யாரோ ஒருவர் நாய்கள் குளிர் காய்வதற்கு வசதியாக நெருப்பு மூட்டி உள்ளார். நாய் குட்டிகள் நெருப்பின் அருகே அமர்ந்து கடும் குளிரின் குளிர் காயும் வீடியோ பலரின் மனதையும் நெகிழ வைத்துள்ளது. தற்போது அந்த அழகிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் நாய்கள் குளிர் காய்வதற்காக நெருப்பு மூட்டிய நபருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

DogLove@India இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@doglove.india)