பாகிஸ்தான் நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்கள், பெட்ரோல் ,டீசல் உள்ளிட்ட பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்த நிலையில் அந்நாட்டில் உள்ள பஞ்சாப், லாகூர், குஜரன்வாலா, பைசலாபாத் உள்ளிட்ட மாநகரங்களில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் உள்ள 70 பெட்ரோல் நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றன. மேலும் மீதமுள்ள பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் விற்கப்படுவதில்லை எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இதனால் அங்குள்ள மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்குள்ளாகியது. இது குறித்து பாகிஸ்தான் பெட்ரோலிய பொருட்களுக்கான விநியோகஸ்தர்கள் சங்கம் கூறியதாவது “எண்ணெய் வர்த்தக நிறுவனங்கள் சரியான முறையில் பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களை விநியோகம் செய்யவில்லை” என குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக எண்ணெய் நிறுவனங்கள் கூறியதாவது “சிலர் வேண்டுமென்றே எரிபொருட்களை பதுக்கி வைத்து செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அதிக விலைக்கு விற்கின்றனர்” என்று கூறியுள்ளது.