காதலர் தினத்தை முன்னிட்டு வெளிநாடுகளில் இருந்து ரோஜா பூக்களை இறக்குமதி செய்ய நேபாள அரசு தடை விதித்துள்ளது.

வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படவுள்ளது. காதலர் தினத்தை முன்னிட்டு காதலர்கள் ரோஜா பூக்களை வழங்கி தங்களின் அன்பை பரிமாறி கொள்வது வழக்கம். இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு வெளிநாடுகளில் இருந்து ரோஜா பூக்களை இறக்குமதி செய்ய நேபாள அரசு தடை விதித்துள்ளது.

ஏனெனில் ரோஜா பூக்கள் மற்றும் பிற தாவரங்களின் மூலம் நோய் ஏற்படும் அபாயம் உள்ளதால், இதுபோன்ற நோய்கள் குறித்த முறையான ஆய்வுகள் எதுவும் செய்யப்படாததால் இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக நேபாள தாவர தனிமைப்படுத்தல் மையம் மற்றும் பூச்சிக்கொல்லி மேலாண்மை மையம் கூறியுள்ளது. இதையடுத்து காதலர் தினத்திற்கு ரோஜாப்பூக்கள் தட்டுப்பாடுகள் ஏற்படலாம் என விற்பனையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.