ஸ்விட்சர்லாந்து நாட்டில் இதுவரை புதிதாக ஒருவர் வாடகை வீட்டிற்கு சென்றால் அவர் முன்பு இருந்தவரை விட கூடுதல் வாடகை அளிக்க வேண்டும் என்பது ஆகும். இந்த வழக்கம் பல நாடுகளில் உள்ளது. ஆனால் மார்ச் மாதம் முதல் அந்நாட்டில் ஏற்கனவே வீடுகளில் குடியிருப்போர் கூடுதல் வாடகை செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த வாடகை உயர்வுக்கு காரணம் மார்டெஜ் ரேபறேன்ஸ் ரேட் என்னும் விஷயம் தான்.

அது என்னவென்றால், வாடகை உள்பட மற்ற வரி விகிதங்கள் உயர்த்தப்படுவதே இந்த விஷயத்தின் அடிப்படையில் இருந்து தான். குறிப்பாக இந்த உயர்வு வீட்டு உரிமையாளர்களை தான் பாதிக்கும். ஆனால் அவர்களோ இதனை வீட்டில் வாடகைக்கு இருப்பவர்களின் தலையில் போட்டு விடுகிறார்கள். இதனாலேயே இது வாடகைக்கு இருப்பவர்களை பெரிய அளவில் பாதிக்கின்றது. இந்த மார்டெஜ் ரேபறேன்ஸ் ரேட் உயர்வு மார்ச் மாதத்திலிருந்து எதிர்பார்க்கலாம் என கூறப்பட்டுள்ளது.