கடக ராசி அன்பர்களே,

இன்று கண்டிப்பாக நன்மைகள் நடைபெறும் நாள் என்று சொல்ல முடியும். எதற்கும் பயப்பட வேண்டாம். துணிந்து  செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும். சண்டை சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம். நண்பருக்கு வேண்டியதை செய்து கொடுப்பீர்கள். அடுத்தவர்களுக்கு உதவுவதில்  வல்லவராக காணப்படுவீர்கள். உத்தியோகத்தில்  நல்ல விஷயங்கள் நடக்கும். மனதிற்கு பிடித்தமான நிகழ்வுகள் நடைபெறும்.

இன்று தொழில் வியாபாரத்தில்  வருமானம் சீராக இருக்கும். குடும்பத்தில்   மகிழ்ச்சி அதிகரிக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் சீராகும்.புதிய  திட்டங்களை சாமர்த்தியமான  செயலால்  நடத்தி  வெற்றி பெறுவீர்கள். திறமையால் நல்ல பெயர் கிடைக்கும். பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். நண்பர்களால்  தக்க சமயத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும்.  அடுத்தவர்களுக்காக செய்யும் காரியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

இன்று பெண்களுக்கு நல்ல நாளாகவே உள்ளது. பிள்ளைகளுடன் கொஞ்சி பேசி மகிழ்வீர்கள். இஷ்ட தெய்வத்தின் அருள் துணையாக இருக்கிறது. இன்று மாணவர்கள் புதுப்புது யோசனைகளை கூறுவீர்கள். படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். முயற்சி செய்தால் முடியாதது எதுவுமில்லை என்று நினைத்து செயல்களில் ஈடுபடுங்கள். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள் நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  : வடக்கு

அதிர்ஷ்ட எண்  : 6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்  :  பச்சை மற்றும் சிவப்பு நிறம்