மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி,  2008ல் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி தமிழகத்திலே அந்த காலகட்டத்திலே இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்…. கழகத்தினுடைய பொதுச் செயலாளர் உச்சநீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்தார்கள்.  உச்ச நீதிமன்றத்திலே… என்னுடைய தமிழ்நாட்டு மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள.

அவர்களால் அந்த பாதிப்பிலிருந்து மீட்டெடுக்க கச்சத்தீவை மீண்டும் இந்தியாவிற்கு,  தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டும் என்று நம்முடைய புரட்சித்தலைவி அம்மா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அன்றைய அரசாங்கம் திமுக அரசாங்கம். அதனை கண்டு கொள்ளவில்லை. அதோடு உச்சநீதிமன்றம் உடனடியாக மாநில அரசுக்கும் – மத்திய அரசுக்கும் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கியது. அந்த காலகட்டத்தில் கூட இங்கே ஆட்சி செய்த முதலமைச்சர் திரு. கருணாநிதி அவர்கள் உடனடியாக பதில் மனு போடல.

மத்திய அரசாங்கம் என்ன பதில் மனு போடுகிறது என்று பார்த்து,  தமிழ்நாடு பதில் மனு தாக்கல் செய்யும் என்று அறிவித்தார். ஆனால் மத்திய அரசு கச்சத்தீவை மீட்க முடியாது. ஏற்கனவே ஒப்பந்தம் செய்ததை ரத்து செய்ய முடியாது. அது முடிந்து போன பிரச்சனை என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்துவிட்டது. அதையே.. அப்படியே.. தமிழ்நாட்டு முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் சொன்னார்.  மத்திய அரசு என்ன பதில் மனு போட்டதோ,  அதே பதில் பதிலை தமிழக அரசு உச்ச நீதிமன்றத்திற்கு போட்டது என தெரிவித்தார்.