ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள செட்டியாம்பாளையத்தில் கோயில் திருவிழாவில் நடந்த பரண் கிடாய் பூசை நடைபெற்றது. இதில், ஆடுகளை வெட்டி அதன் ரத்தத்தை பூசாரி பழனிசாமி (45) குடித்து வந்தார். இந்த நிலையில், ஒரு ஆட்டின் ரத்தத்தை குடித்த பூசாரி, சில நிமிடங்களிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து இதனைக் கண்ட பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.   இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த  சிறுவலூர்  காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.