திருப்பத்தூர் மாவட்டத்தில் கோத்தாண்டபட்டி-வாணியம்பாடி ரயில்வே நிலையத்திற்கு இடைய புத்துக்கோவில் ரயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார்‌. இதுகுறித்த தகவலின் பேரில் ஜோலார்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது இறந்தது போன வாலிபர் போயர் காலனி பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் (24) என்பது தெரியவந்தது.

இவர் பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் எம்பிஏ முதலாமாண்டு படித்து வந்துள்ளார்‌. இவர் தன்னுடைய தந்தை பழனியிடம் கல்லூரிக்கு சென்று வருவதற்கு மோட்டார் சைக்கிள் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு பெற்றோர் பிறந்தநாளில் பைக் வாங்கி தருவதாக கூறியுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பெங்களூருவில் இருந்து சொந்த ஊருக்கு வந்த ஜெயப்பிரகாஷ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் பைக் வாங்கி கொடுக்காததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.