தமிழகத்தில் விவசாயிகளுக்கு பல நலத்திட்டங்களை அரசு வழங்கிவரும் நிலையில் சூரிய ஆற்றலில் இயங்கும் வகையில் ஐந்தாயிரம் விவசாய மின் இணைப்புகளை சோதனை அடிப்படையில் மாற்றி அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வசதியில் விவசாய பயன்பாடு போக மின்சாரத்தை விவசாயிகள் அரசுக்கு விற்பனை செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் பிரதமரின் விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் எந்த மின் இணைப்புகள் மாற்றியமைக்கப்படுகிறது, எந்த திட்டத்திற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் தலா 30 சதவீதம் நிதி வழங்கும், எஞ்சிய 40 சதவீதம் நிதி மின்வாரிய உதவியுடன் வங்கி கடன் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.