ஆர்சிபி வீரர் விராட் கோலிக்கு தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதாகவும், அவரின் உயிருக்கே அச்சுறுத்தல் இருப்பதாகவும் குஜராத் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் இன்று நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருந்த பயிற்சியை ஆர்சிபி அணி ரத்து செய்துள்ளது .

இரண்டு நாட்களுக்கு முன்னதாக அகமதாபாத் விமான நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் 4 பேரை மாநில தீவிரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கமொழி நாளிதழ் ஆன ஆனந்த் பஜார் பத்திரிகையில் இந்த தகவல் வெளியான நிலையில் தற்போது பயிற்சி ரத்து செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.