இந்த கிரிக்கெட் வீரர் அஸ்வின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீரிடம் நீங்கள் ஏன் சிரிப்பதில்லை? என்று கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு பதில் அளித்த கௌதம் கம்பீர் எனக்கு புரியவில்லை. சில சமயத்தில் சிரிக்காததால் இவர் சீரியஸ் ஆனவர் எரிச்சலோடு இருக்கக்கூடியவர். எப்போதும் இறுக்கமான முகத்துடன் இருப்பவர் என்று பேசுகிறார்கள் .

மக்கள் நான் சிரிப்பதை பார்ப்பதற்காக மைதானத்திற்கு வருவதில்லை. அவர்கள் தங்களுடைய அணி வெற்றி பெறுவதை பார்ப்பதற்காக தான் வருகிறார்கள். எனவே சிரிப்பை வைத்து என்னால் உதவ முடியாது. நான் மென்மேலும் வெற்றி பெற வேண்டும் என்று வெறித்தனமாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்..