தென்னாப்பிரிக்கா அணியின் முக்கியமான வீரராக இருந்த குயிண்டன் டி காக், கடந்த வருடம் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதாக அறிவித்திருந்தார்.

உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு அவரது ஓய்வு திடீரென கிரிக்கெட்  ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவர் தனது ஓய்வை திரும்பப் பெற்றிருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, பாகிஸ்தான் அணிக்கு எதிரான வரவிருக்கும் ஒருநாள் தொடருக்காக தென்னாப்பிரிக்கா அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது மட்டுமல்லாமல், வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் அவர் பங்கேற்பதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் டி காக், மீண்டும் ஒருநாள் போட்டிகளில் தன்னை நிரூபிக்கத் தயாராக உள்ளார். அவரது பங்களிப்பு தென்னாப்பிரிக்க அணிக்கு வலுவூட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.