குவைத்தில் நடைபெற்ற ஒரு கிரிக்கெட் போட்டியில் நிகழ்ந்த அசாத்தியமான மற்றும் சிரிப்பூட்டும் ஒரு சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது கிரிக்கெட் போட்டியின் போது, பேட்டிங் செய்தவருக்கு  எதிராக பந்துவீசிய பவுலர், ஒரே பந்தில் விக்கெட்டை நான்கு முறை கிளீன் போலடாக்கினார். அவரது சுழல் பந்துகள் மிகவும் வித்தியாசமானதாக இருந்ததால், பேட்டிங் செய்தவரால்  பந்தை தொட கூட முடியாமல் திகைத்துவிட்டார். விக்கெட் கீப்பர் கூட சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் சிரித்ததை வீடியோவில் காணலாம். இவ்வீடியோவை ஆங்கிலம் பேசும் பிரபல அம்பயர் ரிச்சர்ட் கேட்டில்பரோ X தளத்தில் பகிர்ந்துள்ளார்.

“குவைத் காட் டாலண்ட். பவுலர் ராக்டு – பேட்ஸ்மன் ஷாக்டு!” என பரபரப்பான தலைப்புடன் பகிரப்பட்ட இந்த வீடியோ, பல சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகிறது. இதைப் பார்த்த இணையவாசிகள், “இது நோ பால் இல்லையா?” அல்லது “பந்து தரையில் பட்டவுடன் அடித்தால் நிச்சயம் சிக்ஸ்” எனக் கருத்துகள் பதிவிட்டனர். மேலும், “இவர் ஹர்பஜன் சிங், முரளிதரன், சுனில் நரேன் கூட்டணி போல,” என்றும், “இது லகானில் கச்சரா போலச் சுழல் பந்துகள்!” என்றும் சிலர் கலாய்த்து கருத்து தெரிவித்தனர். மேலும் இந்த வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது .